G00z3MOboAAuQbQ

இட்லி கடை டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெறுமென படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தினை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்.1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இட்லி கடை படத்தில் முருகன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளதை அறிமுக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில், நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், சமூத்திரக்கனி, ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், டிரைலர் வெளியீட்டு விழா வரும் செப்.20ஆம் தேதி, கோவையில் ஃப்ரோஜன் மாலில் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

The film crew has announced that the trailer launch of Idli Kadai will be held in Coimbatore.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest