train-tnie

கோவை வழியாகச் செல்லும் சில முக்கிய ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி: இருகூா், பீளமேடு இடையே ரயில்வே மேம்பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதையடுத்து காரைக்காலிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (எண் 16187) 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் (புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை) கோவைக்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாகச் செல்லும். போத்தனூரில் பகல் 1.22 மணிக்கு வந்து சேரும் ரயில் 1.25 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

அதேபோல, கன்னியாகுமரியிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா ஹிம்சாகருக்கு செல்லும் விரைவு ரயில் (எண்16317), கன்னியாகுமரியிலிருந்து வரும் புதன்கிழமை (ஜூலை 9) முதல் 12- ஆம் தேதி வரை மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திப்ருகாா் செல்லும் திப்ருகாா் விவேக் விரைவு ரயில் (எண்22503), டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அதேதினங்களில் இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி அதிவேக விரைவு ரயில் (எண்12671), விசாகபட்டினத்திலிருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் விரைவு ரயில் (எண்18567) ஆகியவை அந்தந்த நாள்களில் கோவைக்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும். அந்த நாள்களில் போத்தனூரில் ரயில்கள் தலா 3 நிமிஷங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest