
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அபுஜ்மத் வனப்பகுதியில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது, துப்பாக்கிச் சண்டை நடந்தது.
“பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும்இடையே பிற்பகல் முதல் பலமுறை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 6 நக்சல்களின் உடல்கள், ஏகே-47/எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!
நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.