
சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, பலியானவர்கள் சுத்வாய் கிராமத்தைச் சேர்ந்த கவாசி ஜோகா (55), படா டாரெம் கிராமத்தைச் சேர்ந்த மங்லு குர்சம் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை இரவு டாரெம் காவல் நிலையப் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இந்தக் கொலைகள் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். இந்த சம்பவத்துடன், பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 27 பேர் மாவோயிஸ்டுகள் வன்முறையில் பலியாகியுள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி பிஜாப்பூரில் உள்ள ஃபர்சேகர் பகுதியில் 2 தற்காலிக ஆசிரியர்களும், ஜூன் 21 ஆம் தேதி, பிஜாப்பூரில் உள்ள பாமேட் காவல் நிலையப் பகுதியில் இரண்டு கிராமவாசிகளும் நக்சல்களால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.