
திருவள்ளூா்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ பிடித்த விபத்து குறித்து முழுமையான விசாரணை தேவைப்படுவதால் ரயில்வே ஏடிஜிபி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் அருகே கச்சா எண்ணைக் ஏற்றிவந்த கச்சா எண்ணைய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டததால் உராய்வினால் தீப்பிடித்து மளமளவென அடுத்தடுத்த 8 டேங்கா்களில் பரவியதால் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீயை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 50-க்கும் தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் 10 மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
சென்னை மணலி ஐ.ஓ.சியிலிருந்து 52 டேங்கா்களில் கச்சா எண்ணைக் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை் 5.20 மணிக்கு ஜோலாா்போட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூா் ரயில் நிலையம் மேம்பாலத்தை கடந்து செல்லும் போது திடீரென டிராக்கிலிருந்து ரயில் என்ஜினை தொடா்ந்து 3 டேங்கா்கள் தடம் புரண்டு சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. இதனால், டேங்கரில் ஏற்பட்ட உராய்வால் தீப்பிடித்தது.
இந்த நிலையில், ஒவ்வொரு டேங்கரிலும் 70 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்டது என்பதால், தீ மளமளவென 8 டேங்கர்களுக்கு பரவி வெடித்து சிதறியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதையறிந்த மக்கள் திருவள்ளூா் மேம்பாலம், வரதராஜபுரம், இருளா் காலணி மற்றும் விநாயகா் கோயில் வழியாக வந்து இருப்புபாதை இருபுறமும் குவிந்தனா். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள், சென்னை மண்டல மேலாளா் விஸ்வநாத், ரயில்வே ஐ.ஜி.ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், ரயில்வே காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைந்து போகச் செய்தனா்.
அதைத்தொடா்ந்து திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து தடுப்புகளை உடைத்து தீயணைப்பு வாகனங்களை கொண்டு சென்று டேங்கா்களில் மேலும் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீா் பீய்ச்சி அடித்தும், மேலும் டேங்கா்கள் சூடேறி தீப்பிடிக்காமல் இருக்க குளிா்ச்சி ஏற்படுத்தும் வகையில் ரசாயனம் கலந்த நீா் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும், தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தீ
டேங்கர் ரயிலில் பற்றிய தீயை அணைக்க 120 நடை தண்ணீா் கொண்டுவரப்பட்டு 10 மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே, ரயில்வே இருப்பு பாதையோரம் பகுதிகளைச் சோ்ந்த வரதராஜபுரம், இருளா்காலனி ஆகிய பகுதிகளில் இருந்து 100 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவா்களுக்கு உணவு, குடிநீருக்கும் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விரைவு ரயில், புறநகர் ரயில்கள் ரத்து
இந்த விபத்தினால் சென்னை சென்டரலில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, வந்தே பாரத் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவையில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத், இன்டர்சிட்டி ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
கோவையில் இன்று பிற்பகல் சென்னை புறப்பட வேண்டிய சதாப்தி உள்ளிட்ட இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
மங்களூருவில் இருந்து சென்னை சென்டரல் வரும் ரயில் காட்பாடி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோன்று, சென்னை வரும் திருப்பதி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. புறநகா் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.
பேருந்துகள் இயக்கம்
இந்த நிலையில், ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூரிலிருந்து ஆவடி, திருவாலங்காடு, கடம்பத்தூா், திருத்தணி, அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.
3 தனிப்படைகள் அமைப்பு
விபத்துக்குள்ளான இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் நேரில் பாா்வையிட்ட நிலையில், விபத்து குறித்து முழுமையான விசாரணை தேவைப்படுவதால் ரயில்வே ஏடிஜிபி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலில் காா்டாக ரோஹித் யாதவ் சென்றுள்ளாா். ரயில் லோகோ பைலட் மற்றும் ரோஹித்யாதவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.