43829843d04ec7cec14afa5517232686

சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சவூதி அரேபியாவில் தற்போது, போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம் மீண்டும் தொடங்கியது.

இது குறித்து சௌதி அரசின் செய்திப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில், சோமாலியா நாட்டைச் சேர்ந்த நான்கு பேரும், எத்தியோபியாவைச் சேர்ந்த ஒருவரும், சவூதிக்குள் போதைக் பொருள் கடத்தி வந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்து. ஒரு சவூதியைச் சேர்ந்த நபருக்கு, அவரது தாயைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆணடு தொடங்கியது முதல், சவூதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது. இவர்களில் சுமார் 150 பேர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். கடந்த ஆண்டு மட்டும் சவூதியில் 338 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை தோற்கடிக்கும் வகையில் இந்த ஆண்டு மரண தண்டனை அதிக வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில், மக்களிடையே ஒரு ஒழுங்கு ஏற்படவும், போதைப் பொருள் இல்லாத நாட்டை உருவாக்கவும், மரண தண்டனை அவசியம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று பல காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அந்த நாட்டின் முடிவில் மாற்றம் ஏற்படவில்லை.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest