mallikarjuna-kharege-pti

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

காய்ச்சல் மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) கடந்த அக். 1-ம் தேதி காலை அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால் பேஸ்மேக்கர் கருவி பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

கார்கே இன்று காலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவரது உடல்நலம் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.

விரைவில் அவர் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

All India Congress Committee (AICC) president Mallikarjun Kharge is expected to return to work on Friday, a day after he was discharged from a Bengaluru hospital following a pacemaker implantation.

இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest