
இந்தியா நடத்திய சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்தான் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்மீரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தலைமையிடமிருந்துதான், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த வேண்டும். படைத் தளபதிகள், இறுதிச் சடங்கில் சீருடையுடன் பங்கேற்று மரியாதை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இலியாஸ் வெளியிட்ட விடியோ ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
திகார் சிறையிலிருந்து தப்பியபிறகு, நேராக பாகிஸ்தான் வந்து தஞ்சமடைந்ததாகவும், பாகிஸ்தானின் பாலாகோட் மாகாணத்தில், அவர் முகாம்களை ஏற்படுத்தி, தன்னுடைய இலட்சியங்களை நிறைவேற்ற பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து, மும்பை மற்றும் தில்லியில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும், இந்தியாவில் நடத்தப்பட்ட 26/11 மும்பை தாக்குதல் உள்பட, பல பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் மௌலானா மசூத் ஆசார் இருந்ததையும் இலியாஸ் உறுதி செய்திருக்கிறார்.
புதன்கிழமை, சமூக வலைத்தளங்களில் பரவிய மற்றொரு விடியோவில், லஸ்கர்-ஏ-தொய்பா துணைத் தளபதி சைஃபுல்லா கசூரி பேசுவது பதிவாகியிருக்கிறது. இவர்தான் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுபவர். அந்த விடியோவில், இந்தியாவுக்கும் பிரதமருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய நாட்டின் அணைகள், ஆறுகள் மற்றும் ஜம்மு காஷ்மீரை கைப்பற்றுவோம் என்று அவர் அதில் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது தரைமட்டமாக்கப்பட்ட முரித்கே பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க, பாகிஸ்தான் அரசும், ராணுவமும் நிதி வழங்கியிருப்பதையும் அவர் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாங்கள் சற்று சவாலான நேரத்தை சந்தித்து வருகிறோம், ஆனால் உத்வேகத்துடன் எழுவோம். நாங்கள் பட்டுப் போல எங்களது மக்களுக்கு மென்மையானவர்களாக இருப்போம், ஆனால் எதிரிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்டு இருப்போம், நாங்கள் எங்கள் சக்தியை இழந்துவிட்டதாக எதிரிகள் நினைக்க வேண்டாம், நாங்கள் இன்னும் அதிவேகத்துடன் எழுவோம் என்றும் கூறி விடியோ வெளியிட்டிருக்கிறார்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.
Pakistan Army Chief orders officers to attend funeral of terrorists killed in Sindh attack
இதையும் படிக்க… ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து