6ed970a1-77e4-4c51-ac1e-25dfdcf6eb3c

சின்னமனூரில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாமாயில் எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடை மற்றும் சத்துணவு கூட்டங்களில் விநியோகம் செய்ய வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் சின்னமனூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முழுவதும் நூறு ரேஷன் கடைகளில் 100 நாள் தொடர் போராட்டத்தை முன்னிட்டு சின்னமனூரில் 78 ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் சிவனாண்டி தலைமை வகித்தார். செயலாளர் பிரான்சிஸ் சேவியர் பலரும் கலந்து கொண்டனர்.

Farmers’ organizations protested in Chinnamanur, demanding the provision of coconut oil at ration shops.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest