E0AE95E0AEAEE0AEB2E0AF8D

திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில், சிறந்த தமிழ் படத்துக்கான விருது, சிறந்த திரைக்கான விருது (இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்), சிறந்த துணை நடிகருக்கான விருது (எம்.எஸ். பாஸ்கர்) என மூன்று விருதுகள் பார்க்கிங் திரைப்படத்துக்கு கிடைத்தது.

மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது (பாடல்கள்) வாத்தி திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டது.

எம்.எஸ்.பாஸ்கர்

மேலும், லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக non-feature film பிரிவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு தொடர்ச்சியாகப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வரிசையில் நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசன், “2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது.

‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து.

திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest