nainar-222

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.

மேலும் விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர. மாணர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்விடுதிகளில் நமது பெரும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அத்தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சிவகங்கை காளையார்கோவில் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் நயினார், “சிவகங்கை காளையார்கோவில் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியின் காப்பாளினி, விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல்

முறையான அடிப்படை வசதிகள் மற்றும் தகுதியான ஊழியர்களை மேம்படுத்தாமல், வெறும் கட்டடங்களின் பெயரை விதவிதமாக மாற்றி வைப்பதால் யாருக்கு என்ன பயன்?

அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது?

திமுகவே இதுபோன்ற மதமாற்றவாதிகளை ஊக்குவித்து இந்துமதத்தை அழிக்க முயற்சிக்கிறதா?

கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை. அதுவும் அரசு விடுதிக்குள் நடக்கும் இந்த சமூகவிரோதச் செயலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் அரசும் அதை வேடிக்கை பார்க்கக்கூடாது. எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருமதி. லட்சுமி என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் பிற அரசு மாணவர் விடுதிகளையும் தனது நேரடிக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest