cpim

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னாட்டுத் துறையின் அழைப்பை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையிலான குழுவினர், நேற்று (செப். 22) இரவு தில்லி விமான நிலையத்தில் இருந்து சீனா புறப்பட்டுச் சென்றனர்.

இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் செப். 30 ஆம் தேதி வரையிலான 7 நாள் பயணத்தில், இந்தக் குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்தக் குழுவில் முக்கிய உறுப்பினர்கள் முஹம்மது சலீம், ஜித்தேந்திரா சௌத்ரி, ஆர். அருண் குமார், மத்திய குழு உறுப்பினர்கள் கே. ஹேமலதா மற்றும் சி.எஸ். சுஜாதா உள்ளிட்ட 6 பேர் சீனா தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: வாக்குத் திருட்டு நடைபெறும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல்

A delegation from the Communist Party of India (Marxist) has visited China at the invitation of the Chinese Communist Party.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest