ajays-19

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ ‘ரோபோ டாக்ஸி’ சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார்.

சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த பெண்மணியை அக்கம்பக்கத்தினர் ஏணியின் உதவியோடு மீட்டுள்ளனர்.

Baidu Fell Viral
Baidu Fell Viral

சீன சமூக வலைத்தளங்களில், ஒரு கட்டுமான குழிக்குள் பாய்டு வாகனம் விழுந்துகிடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த கட்டுமான தளத்தில் தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இருந்தன என்றும் அவற்றை மீறி விபத்து நடந்துள்ளது என்றும் ஹுஷாங் செய்தி தளம் தெரிவித்திருக்கிறது.

இந்த சம்பவம் சீனாவில் ரோபோ டாக்ஸிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எனினும் பாய்டு நிறுவனம் இதுவரையில் இதற்கு விளக்கம் அளிக்கவில்லை.

பாய்டு சீனாவின் மிகப் பெரிய வாகன நிறுவனங்களில் ஒன்று. வுஹான், பெய்ஜிங் மற்றும் சோங்கிங் போன்ற பெரு நகரங்களில் ரோடோ டாக்ஸி சேவையை அளித்து வருகிறது.

சமீபத்தில் உலக அளவில் தங்கள் சேவையை விரிவுபடுத்த முயன்று வருகிறது. அமெரிக்காவில் ஊபர் லிஃப்ட் போன்ற நிறுவங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பாய்டுவுக்கு போட்டி நிறுவனமாக கருதப்படும் pony.ai-ன் கார் ஒன்று பெய்ஜிங்கில் பற்றி எரியும் வீடியோ ஒன்று, மே மாதம் வெளியாகி நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த நிறுவனம், பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்டிருந்த கார் கணினி பிரச்னையால் எரிந்ததாகவும், பயணிகளுக்கு பிரச்னை இல்லை என்றும் விளக்கமளித்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest