
சென்னை, புறநகரில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகியும் மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது.
கோயம்பேடு, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராய நகா், மயிலாப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளான செங்குன்றம், சோழவரம், பெரம்பூர், மூலக்கடை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் சாலையில் திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் பெய்து வரும் திடீர் மழைக் காரணமாக, வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதையும் படிக்க: காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!