vikatan_2019_05_06b2ba2e_b181_46af_9df9_9527e1e995fe_50302_thumb

சென்னையின் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்திருக்கின்றன மெட்ரோ ரயில்கள். 

சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் அலுவலகங்களுக்கு, முக்கியப் பணியங்களுக்காக பயணம் செய்து வருகின்றனர்.

இதில் QR code அத்தனை பயணிகளுக்கும் பயன்படுத்துவது இப்போதைய மெட்ரோ தொழில்நுட்பத்திற்கு இயலாத காரியம்.

இதனால் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் ‘QR code’ டிக்கெட்களை பெரும் நெரிசலை தவிர்க்கலாம்.

Chennai Metro Rail | சென்னை மெட்ரோ ரயில்

இந்நிலையில் இன்று காலை முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல்  சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ க்யூஆர் ஆன்லைன் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த CMRL அறிவிப்பில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, STATIC QR ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக வேலை செய்யவில்லை.

எனவே பயணிகள் CMRL மொபைல் செயலி, Whatsapp டிக்கெட்டிங், Paytm, phonepe, Singara Chennai Card, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம்.” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest