
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, இன்று காலை 7 மணிக்கு ‘கம்யூனிட்ரீ’ (Communitree) என்ற அமைப்பு சென்னையில் ஒருங்கிணைத்த கடற்கரை தூய்மைப் பணி, காசிமேடு முதல் கோவளம் வரை பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுக்கொண்ட உற்சாகமான நிகழ்ச்சி நடைபெற்றது.
‘கம்யூனிட்ரீ’ என்னும் அரசு சாரா நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக கடற்கரை தூய்மைப் பணிகளைச் செய்து வந்ததாகவும், இந்த வருடம் சென்னையில் 25,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் கலந்துகொண்டதாகவும் அதன் நிறுவனர் ஹாபிஸ் கான் தெரிவிக்கிறார்.




மெரினா கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி நிறுவன ஊழியர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் தன்னார்வலர்களாகப் பங்கேற்றுக் கொண்ட தூய்மைப் பணி உற்சாகமாக நடைபெற்றது.
இதற்கு ஒளியேற்றும் விதமாக, தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கைஉறைகள், குப்பைப் பைகள் போன்ற உபகரணங்களோடு, புத்துணர்வு அளிக்கும் டீ, ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக, மக்களின் பாதுகாப்புக்காக அவசர ஊர்திகள் மற்றும் முதலுதவிக் கருவிகளும் தயார் நிலையில் இருந்தன.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பாளர் ஹாபிஸ் கான், இது முழுக்க முழுக்க ஒரு மக்கள் இயக்கம் என்றும், அரசு சார்பில் எல்லா அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு 200 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு குறைந்தது 250 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக சேகரிக்கப்பட்டவை பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
– கோகுல் சரண்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs