
புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கா்நாடகம் இடையேயான காவிரி நதிநீா் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
இதனையடுத்து இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன.
காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இதுவரை 43 முறை கூட்டியுள்ளது.
இந்நிலையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் செப்டம்பா் 26 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அதன் தலைவா் எஸ்.கே ஹல்தாா் தலைமையில் தில்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் செயலர் டி. டி .சா்மா தகவல் அனுப்பியுள்ளாா்.