

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தியாவின் 88-ஆவது ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகி பெருமை தேடித் தந்துள்ளார் திவ்யா.

‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக மகுடம் சூட்டியிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த 4-ஆவது வீராங்கனை என்ற பெருமை திவ்யாவுக்கு கிட்டியுள்ளது.

2025-இல் இந்தியாவிலிருந்து எல். ஆர். ஸ்ரீஹரி, அ. ரா. ஹரிகிருஷ்ணன் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய மூவர் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகி சாதனை படைத்துள்ளனர்.

அதிக ‘கிராண்ட் மாஸ்டர்’ கொண்ட நாடுகள் பட்டியலில் ரஷியா, அமெரிக்கா, ஜெர்மனி, உக்ரைனுக்கு அடுத்த இடத்தில் 5-ஆவதாக இந்தியாவும் முன்னேறியுள்ளது.

இளம் வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வென்ற சாதனையாளர்கள் பட்டியலில் இனி திவ்யாவுக்கும் சிறப்பிடம் உண்டு…

தாயாருடன் திவ்யா தேஷ்முக்!

வாழ்த்துகள் திவ்யா தேஷ்முக்!