
மகாராஷ்டிர மாநிலத்தின் பாரமதி விமான நிலையத்தில், பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புணே மாவட்டத்தில், ரெட்பேர்ட் விமான பயிற்சி மையத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சிகளில், இன்று (ஆக.9) ஈடுபட்டிருந்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடுவானில் பறந்துக்கொண்டிருந்த அந்த விமானத்தில் ஒரு சக்கரம் சேதமடைந்துள்ளதைக் கவனித்த விமானி, காலை 8 மணியளவில் அவசரமாகத் தரையிறக்க முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தரையிறக்கப்பட்டபோது, அதன் முன் சக்கரம் கழன்று ஓடியதால், அந்த விமானம் டாக்ஸிவேவில் இருந்து விலகி, விமான நிலையத்தின் மறுபக்கத்தினுள் நுழைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், விமானி பாதுகாப்பாகவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மாணவிகள்!