
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்யப்போவதாக குடியரசுத் தலைவர் முர்முக்கு அவர் ராஜிநாமா கடிதத்தைத் திங்களன்று கடிதம் அனுப்பினார். அவருக்கு இன்னும் சுமார் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த முடிவை எடுத்ததாக தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது,
ஜகதீப் தன்கரின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நேற்று நண்பகல் 12.30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சிறிது நேர விவாதம் முடிந்த பின்னர் மீண்டும் மாலை 4.30 மணிக்கு அவை கூட முடிவு செய்தது.
அதேபோல் மாலை 4.30 மணிக்கு ஜக்தீப் தன்கர் தலைமையில் மீண்டும் குழு கூடியது. ஆனால் நட்டா, கிரன் ரிஜிஜூ வருகைக்காகக் காத்திருந்தபோது, அவர்கள் வரவேயில்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்துகொள்ளாதது ஐக்தீப் தன்கருக்கு தெரிவிக்கப்படவில்லை. அவர் கோபமடைந்த அன்றைய நாள் முழுவதும் அலுவல் ஒத்திவைத்தார்.
நேற்று மதியம் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. இப்போது ஜக்தீப் தன்கர் ராஜிநாமா செய்துள்ளார். அதற்கு அவர் உடல்நல பாதிப்பு பற்றி காரணங்களைச் சொல்லியுள்ளார். அவர் ராஜிநாமாவுக்கு வேறு ஏதோ அரசியல் காரணங்கள் இருக்கின்றது.
ஜக்தீப் தன்கர் தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.