
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாதியைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு நடவடிக்கையை இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஃஎப் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி)மேற்கொண்டன.
இதுதொடர்பாக இந்திய ராணுவத்தின் சினார் கார்பஸ் கூறுகையில்,
குல்காமில் ஆபரேஷன் அகல் தொடர்ந்து 5வது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
ஜூலை 30 அன்று பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் நடத்திய முந்தைய நடவடிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிவசக்தி பெயரில் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் மூன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
ஜூலை 29 அன்று, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் உயர்நிலைத் தளபதி சுலேமானும் ஜம்மு-காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவைக்குத் தெரிவித்தார்.
ஆபரேஷன் மகாதேவ், சுலேமான் என்கிற ஃபைசல்…, ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.