
இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பும்ராவின் சாதனை சமன்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்.
கடந்த 2021-22 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பும்ராவின் இந்த சாதனையை முகமது சிராஜ் தற்போது சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள்
23 விக்கெட்டுகள்- ஜஸ்பிரித் பும்ரா, 2021-22
23 விக்கெட்டுகள் – முகமது சிராஜ், 2025
19 விக்கெட்டுகள் – புவனேஸ்வர் குமார், 2014
இதையும் படிக்க: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!
Mohammed Siraj has equaled the record of Jasprit Bumrah, the main pacer of the Indian team.