
ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழுந்தது. அப்போது மேல் பாதையில் வந்த மற்றொரு சரக்கு ரயில் அதன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் மொத்த 21 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அவற்றில் இரண்டு சாலையோரத்தில் விழுந்தன.
இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்த தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு கிடைத்தவுடன், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.
எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை: தொல். திருமாவளவன்
ரயில் பாதையை மீட்டெடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. விபத்து காரணமாக, சண்டில்–டாடாநகர், சண்டில்–முரி மற்றும் சண்டில்–புருலியா–பொகாரோ வழித்தடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டாடாநகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.