
ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சிபிஐ (மாவோயிஸ்ட்)-ல் இருந்து பிரிந்த குழுவான ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) குழுவினர் காக்ரா வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் பேரில், ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் கும்லா போலீஸார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இரு தரப்பிலிருந்தும் பல சுற்று தோட்டாக்கள் சுடப்பட்டது.
மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பின்னர் ஏகே-47, 2 ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ஜார்க்கண்ட் காவல்துறை ஐஜி மைக்கேல் எஸ் ராஜ் தெரிவித்தார்.