Real-me-15-pro-edi

ரியல் மீ நிறுவனம் புதிதாக இரு மத்திய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ரியல் மீ 15 மற்றும் ரியல் மீ 15 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் ஜூலை 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு அறிமுகமாகிறது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ரியல் மீ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது மத்திய ரகத்தில் ரியல் மீ 15 மற்றும் ரியல் மீ 15 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

சில்வர், வெல்வெட் பச்சை, ஊதா ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரியல் மீ விலை ரூ. 25,000 என்றும், ரியல் மீ 15 ப்ரோ விலை ரூ. 39,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரியல் மீ 15 ப்ரோ அடிப்படை வேரியன்ட் விலை ரூ. 30,000.

ரியல் மீ 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ரியல் மீ 15 ஸ்மார்ட்போனானது 6.8 அங்குல அமோலிட் திரை கொண்டது. திரையின் பிரகாசம் 6,500 nits அளவுடையது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில்144Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 7300+ புராசஸர் உடையது.

  • 7,000 mAh பேட்டரி திறனுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 80W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • பேட்டரி திறன் அதிகமாக உள்ளதால், 7.66mm தடிமன் கொண்டதாக இருக்கும்.

  • தூசி மற்றும் நீர் புகாத்தன்மையுடன் இருக்கும் வகையில் IP68 மற்றும் IP69 திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரியல் மீ 15 ப்ரோ சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ரியல் மீ 15க்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களுடன் கூடுதலாக அல்ட்ரா வைட் லென்ஸுக்காக 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஸ்நாப்டிராகன் 7, 4ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • ரியல் மீ 15-ஐ விட சற்று அதிகமாக, இந்த மாடல் 7.69 மி.மீ. தடிமன் உடையது.

இதையும் படிக்க | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 10: அறிமுக தேதி அறிவிப்பு

Realme 15 Pro Price In India, Design, Specifications, Color Options, Camera, What To Expect On July 24

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest