
டாப் குக் டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை பாடகி சிவாங்கி தொகுத்து வழங்கவுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட், மீடியா மேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாப் குக் டூப் குக்கு என்ற புதிய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சமையலை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நடுவராக வெங்கடேஷ் பட் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, டாப் குக்கு டூப் குக்கு -2 விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடப்பு சீசனில் டூப் குக்குகளாக விஜய் டிவி மூலம் பிரபலமான பரத், மோனிஷா, ஜி.பி.முத்து, அதிர்ச்சி அருண், தீனா உள்ளிட்டோர் உடன் விஜே நிக்கி, மீனாட்சி, கமலேஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
டாப் குக் டூப் குக்கு நிகழ்ச்சியை விஜே ராகேஷ் உடன் பாடகி சிவாங்கி தொகுத்து வழங்கவுள்ளார். மேலும், இந்த புதிய சீசன் வாரத்துக்கு 2 எபிசோடுகளாக ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நானும் ரெளடிதான் என்ற நிகழ்ச்சியை சிவாங்கி தொகுத்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நிறைவடையும் தங்க மகள்… மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!