
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 18 காசுகள் சரிந்து 85.94 ஆக நிறைவடைந்தது. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலையில் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலர் வலுவடைந்து வருகிறது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.02 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.74 முதல் ரூ.86.05 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 18 காசுகள் சரிந்து ரூ.85.94ஆக நிறைவடைந்தது.
நேற்றைய அமர்வில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.76 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!