AP25213611734092

இந்திய வீரர் முகமது சிராஜ் வெளிநாட்டில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் திடலில் நடைபெற்று வருகிறது.

மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.

மூன்றாம் நாளின் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் ஜாக் கிராலி ஆட்டமிழந்தார். அத்துடன் ஆட்டம் முடிக்கப்பட்டது.

இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 324 ரன்கள் தேவை. இந்தியா வெற்றிபெற 8 விக்கெட்டுகள் தேவையாக இருக்கிறது.

கிறிஸ் ஓக்ஸ் வெளியேறியதால் இங்கிலாந்து 9 விக்கெடுகள் மட்டுமே பேட்டிங் விளையாட முடியுமென்பது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது.

இந்தப் போட்டியில் சிராஜ் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் யாருமே நினைக்காத போது கம்பேக் கொடுத்துள்ளார்.

வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த சிராஜுக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

சோனி ஸ்போர்ட்ஸ் டிஎஸ்பி சிராஜ் எனக் குறிப்பிட்டு அவரது ரொனால்டோ பாணியிலான கொண்டாட்டத்தை பதிவிட்டுள்ளது.

Indian player Mohammed Siraj has set a record by taking 100 Test wickets abroad.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest