trump-ally

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

31 வயதான சார்லி கிர்க், காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிர்க் பலியானார்.

Conservative activist Charlie Kirk dies after being shot at Utah college event

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest