
டிரம்ப் – புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆக. 15-ஆம் தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து பேசுகிறார். உக்ரைன் விவகாரத்தில் நல்லதொரு முடிவை எட்ட இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு சனிக்கிழமை(ஆக. 9) வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பார்க்கலாம்:
“அங்கே அவர்கள் ஏதோ பேசிக்கொள்ளட்டும், இங்கே மக்கள் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாயிருந்தால் அல்ல ஒப்பந்தம் எட்ட விருப்பமிருந்தால் அதை அவர்கள் எப்போதோ செய்திருக்கலாம். அதைச் செய்யவில்லை”.
“இந்த சந்திப்பு வெறும் காட்சிப்போக்குக்காக மட்டுமே”
“புதினின் மரித்த உடல் எடுத்துச் செல்லப்படும் வரை நாங்கள் காத்திருப்போம். ஒருவேளை அதன்பின்னராவது நிலைமை மாறலாம்” ஆகிய கருத்துகள் உக்ரைனில் பரவலாக எழுந்துள்ளன.