
நடிகர் டொவினோ தாமஸின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
நஸ்ரியா நஸிம் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகளைப் படக்குழு தேர்வு செய்துவருகிறது.
மலையாளத்தின் முன்னணி நடிகராக இருக்கும் டொவினோ தாமஸ் வித்தியாசமான படங்களுக்குப் புகழ்ப்பெற்றவர்.
கடைசியாக இவரது நடிப்பில் நரிவேட்டை வெளியானது. இதற்காக அவர் சிறந்த ஆசிய நடிகர் என்ற விருதையும் வென்றார்.
சமீபத்தில் வெளியான லோகா படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், வைரஸ், கும்பலாங்கி நைட்ஸ், தள்ளுமாலா ஆகிய படங்களுக்கு கதை எழுதிய முஷின் பராரி உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.
சூக்ஸமதர்ஷினி படத்தில் நஸ்ரியா கடைசியாக நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.