ab792c632bf1347af9fd721de2abf8db_KJthYKC

புதுதில்லி: வர்த்தகர்களிடமிருந்து வலுவான தேவை மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தலைநகர் தில்லியில் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது.

வெள்ளி விலை இன்று கிலோ ஒன்றுக்கு ரூ.4,000 அதிகரித்து ரூ.1,18,000 ஆகவும், தங்கம் அதிக அளவில் வர்த்தகர்கள் கொள்முதல் செய்ததால் ரூ.1,000 உயர்ந்தது.

இது குறித்து அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்ததாவது:

அனைத்து வரிகளும் உள்பட 99.9 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1,01,020 ஆக உயர்ந்தது. நேற்றையை முடிவில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,00,020 ஆக இருந்தது.

99.5 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் ரூ.900 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ.1,00,450 ஆக நிறைவடைந்தது. இது அனைத்து வரிகளும் உள்பட. இதுவே நேற்றைய வர்த்தக முடிவில், 10 கிராமுக்கு ரூ.99,550 ஆக முடிவடைந்தது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான எதிர்பார்ப்புகள் குறைந்து வருவதால், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதால் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று வெள்ளியின் விலை ரூ.3,000 உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.1,14,000 ஆக இருந்தது. கடந்த மூன்று நாட்களில் வெள்ளி கிலோவுக்கு ரூ.7,500 உயர்ந்துள்ளது.

வெள்ளி சந்தையை தொடர்ந்து, தொழில்துறை தேவையால் வெள்ளி உயர்ந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான வெள்ளி ஒப்பந்தம் ரூ.896 உயர்ந்து, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் கிலோவுக்கு ரூ.1,16,551 என்ற புதிய சாதனை அளவை எட்டியது.

ஆகஸ்ட் மாதத்திற்கான தங்க எதிர்கால ஒப்பந்த சந்தையில் 10 கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.1,00,305 ஆக இருந்தது.

உலகளவில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.26 சதவிகிதம் குறைந்து 3,422.87 டாலராகவும், அதே வேளையில் வெளிநாட்டு சந்தைகளில் ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.26 சதவிகிதம் உயர்ந்து 39.39 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.86.41 ஆக நிறைவு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest