
!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81.840-க்கு விற்பனையாகிறதுது.
சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன்படி, புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.10,230-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்வு
அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.143-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.43 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.