
மாநிலம் முழுவதும் 33 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆர். சிவபிரசாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
மஹேந்தர் குமார் ரத்தோட் ஐபிஎஸ், காவல் துறை தலைமையக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் காவல் கண்காணிப்பாளராக எஸ். விமலா, வேலூர் காவல் கண்காணிப்பாளராக ஏ. மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியமும், தேனி கண்காணிப்பாளராக ஸ்நேக பிரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர் துணை ஆணையராக ஆர். உதயகுமார், தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக டி. குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொளத்தூர் துணை ஆணையராக பி.குமார், மத்திய சென்னை காவல் கண்காணிப்பாளராக கனகேஸ்வரி, கோவை தெற்கு துணை ஆணையராக ஜி. கார்த்திகேயன், மதுரை சிவில் சப்ளை எஸ்.பி.யாக ஸ்ரீனிவாச பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் டிஐஜி என். தேவராணி, காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத் தலைவராகவும், சென்னை மாநகர உளவுத் துறை இணை ஆணையர் ஜி. தர்மராஜன், வேலூர் சரக டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோயம்பேடு துணை ஆணையராக இருந்த அதிவீரபாண்டியன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!