G1NVPjxbYAAb4sd

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கியதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்”, பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பணியினை பேராசிரியர் கே. ராஜன் அவர்களின் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.

பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகரியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “கீழடி, நம் தாய்மடி எனச் சொன்னோம். இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம். அடுத்து, “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்…” என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Deep-sea research on Tamil history begins

இதையும் படிக்க : எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest