அதிமுக 5 கட்சிகளாகப் பிரிந்து போயிருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில்,

“தமிழ்நாட்டைத் தலைகுனிய வைப்பதில் அதிமுகவின் நடவடிக்கை கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களின் கட்சியே 5 கட்சியாகி விட்டது.

இது அண்ணா திமுக இல்லை; எடப்பாடி பழனிசாமி திமுக என்றுதான் சொல்ல வேண்டுமென்று டிடிவி தினகரனே சொல்கிறார்.

தில்லிக்குச் சென்று முக்காடு போட்டு வந்ததன் காரணம், தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவேன் என்பதைத்தான் அவ்வாறு அறிவித்தார். அதுதான் உண்மை.

ஒன்றிலிருந்து ஐந்தான கட்சி, இனி எத்தனையாகப் போகும் என்று தெரியவில்லை. அவர்களுக்கு தமிழ்நாட்டை ஓரணியில் கொண்டுவர வேண்டும் என்றில்லை. அவர்களின் கட்சியையே ஓரணியில் கொண்டுவர முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: திமுக – தவெக போட்டியை ஏற்க முடியாது: நயினார் நாகேந்திரன்

Former Minister Ponmudi criticized ADMK

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest