
தமிழ் சின்ன திரை தொடரில் தெலுங்கு நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடமதி சந்தியாராகம் தொடரில் நாயகனாக நடித்து புகழ் பெற்றவர்.
தற்போது, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தொடரில், பிரித்விராஜ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஸ்வாதி சர்மா மற்றும் ஆல்யா மானசா ஆகிய இருவரை வைத்து புதிய தொடரை ஒளிபரப்ப ஜீ தமிழ் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரில், பிரித்விராஜ் நாயகனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான உள்ளத்தை அள்ளித்தா தொடரில் நடித்துள்ளார். அந்தத் தொடரில் இளம் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார். தற்போது மீண்டும் தமிழ் தொடரில் நடிக்கவுள்ளதால், இவரின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | காத்து வாக்குல ரெண்டு காதல்! தமிழில் புதிய ரொமான்டிக் சீரியல்!
Telugu actor Prithviraj will be starring in a Tamil serial in zee tamil