Capture-1

நடிகர் சூரி புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தது. குறிப்பாக, கருடன் மற்றும் மாமன் நல்ல வசூலையே ஈட்டின.

சூரியை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் முன்வருகின்றன. அதேநேரம், தனக்குக் கிடைத்த தொடர் வெற்றிகள் மூலம் சூரி தன் சம்பளத்தை ரூ. 10 – 12 கோடி வரை உயர்த்தியுள்ளாராம்.

மேலும், தனக்கென தனி மார்க்கெட் உருவாகியுள்ளதால் ஏன் பிறர் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வேண்டும்? நாமே தயாரிப்பாளரானால் என்ன? என்கிற முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகராக இருந்த சூரியை இனி தயாரிப்பாளாராகவும் பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்!

இதையும் படிக்க: தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!

actor soori plan to start new production company

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest