
நடிகர் தனுஷ் கூலி டிரைலரை பார்த்து உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையுடன் ரஜினி, நாகர்ஜூனா, ஆமிர் கான் கதாபாத்திரங்கள் அறிமுகமாவது, சண்டைக் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
அதிவேகமாக, 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும் கிடைத்திருக்கின்றன.
இந்த நிலையில், டிரைலரை பார்த்த நடிகர் தனுஷ், “தலைவா…” என்று உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Thalaivaaaaaaaaaa https://t.co/08yClnJCTC #superstar #coolie
— Dhanush (@dhanushkraja) August 2, 2025
இது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பத்த வச்சுட்டியே பரட்டை… கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!