
சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதனிடையே, அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
சென்னை சிவானந்தா சாலையில் நாளை நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, பட்டாசு வெடிக்கக் கூடாது, இருசக்கர வாகன ஊர்வலம் கூடாது உள்பட 16 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இதனிடையே சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் காவல் விசாரணையில் பாதிக்கப்பட்ட குடும்ப நபர்களை சனிக்கிழமை சந்தித்த விஜய், அவர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி பெற்றுள்ளார்.
The police department has granted permission for the TVK protest in Chennai with 16 conditions.