
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜூலை 15 ஆம் தேதி மதுரையின் பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூஜை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடந்திருந்தது. அன்றே மதுரை மாவட்ட எஸ்.பியிடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு மனுவும் கொடுக்கப்பட்டது.

TVK : ‘கறார்’ காட்டும் காவல்துறை; விஜய்யின் மாநாடு தேதியில் மாற்றம்? – பின்னணி என்ன?
ஆனால், காவல்துறை தரப்பில் அனுமதி கொடுக்கப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டது. இதையடுத்து மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆகஸ்ட் 25ம் தேதிக்கு முன்பாகவே ஆகஸ்ட் 21ம் தேதி மாநாடு நடக்கலாம் என்று பேச்சுகள் அடிபட்டன.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், “ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. அதையொட்டி காவல்துறைக்குப் பாதுகாப்புப் பணி அதிகம் இருப்பதால் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான தேதியில் மாநாடு வைத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை எங்களிடம் கேட்டுக் கொண்டது.
காவல்துறையின் அறிவுறுத்தலின் படி ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 22ம் தேதிக்குள் ஒரு தேதியைத் தேர்வு செய்து மாநாடு நடத்த அனுமதி கேட்டிருக்கிறோம். அது எந்தத் தேதி என்பதை தவெக தலைவர் விஜய் அறிவிப்பார்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs