mayamohanlal175840245037260722728150965831192385099

தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் மோகன்லால், விருதுக்கும் வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

செப். 23-இல் நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ள நிலையில், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொச்சியில் செய்தியாளர்களுடன் மோகன்லால் பேசுகையில்,

நடுவர் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் எனது நன்றிகள். என்னை இந்த புகழை உருவாக்கிய மலையாள சினிமாவுக்கும் நன்றி. எனது 48 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இது ஒரு பெரிய சாதனை.

பல திறமையான சாதனையாளர்கள் சென்ற பாதையில், நானும் ஓர் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.

என்னுடன் பணியாற்றிய பலர் இப்போது இல்லை. என்னுடன் இருந்த இயக்குநர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், உதவியாளர்கள் ஆகியோரும் இந்த விருதில் பங்களித்துள்ளனர். இது தனிப்பட்ட சாதனையல்ல.

மலையாள சினிமாவுக்கு இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அதில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். ஆனால், இது சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்குவதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சார்பட்டா – 2 பேசப்போகும் அரசியல் என்ன?

Mohanlal thanks family, audience after winning Dadasaheb Phalke Award

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest