6850fda750e76

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குற்றச் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறார். இதனை மறுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிடட்டும் என்று கூறியது.

இதையடுத்து ராகுல் காந்தி நேற்று (ஆகஸ்ட் 7) டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்ற வாக்காளர் பட்டியலை வைத்து ஆய்வுசெய்த ஆதாரங்களை வெளியிட்டிருப்பது நாடுமுழுவதும் பேசுபொருளாகி வருகிரது.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

“வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?” – தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தியின் 5 கேள்விகள்

காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். போலி வாக்காளர்களால்தான் பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக எடப்பாடி பழனிசாமி, “சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால்தான் திமுக வெற்றி பெறுகிறது மாநகராட்சி தேர்தலில் கள்ள ஒட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் ஆட்சியில் இருக்கும் திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest