Capture-1

நடிகர் மோகன்லால் நடிக்கும் திரிஷ்யம் – 3 படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘திரிஷ்யம்’ , ‘திரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஹிந்தி, சீன மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில், திரிஷ்யம் 3-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நாளை (செப். 22) கேரளத்தின் தொடுபுழாவில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், மோகன்லால் மற்றும் மீனா உள்ளிட்டோருக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: தாதா சாகேப் பால்கே விருது! ரசிகர்கள், குடும்பத்தினருக்கு மோகன்லால் நன்றி!

actor mohanlal’s drishyam – 3 shoot start sep.22

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest