IIM-Trichy

திருச்சியில் உள்ள இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) காலியாகவுள்ள ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.: EST-II/A-02/2025/002

பணி: Programme Assistant (Trichy Campus)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 40,000 – 45,000

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Programme Assistant (Chennai Campus)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 40,000 – 45,000

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மேலாண்மை பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Secretarial Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 35,000

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Computer Operation-பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Assistant

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ. 35,000 – 40,000

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Operation-இல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Maintenance Technician. (Power Generation)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.30,000 – 35,000

வயது வரம்பு : 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : Electrical Engineering,Electrical and Electronics Engineering-இல் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Graduate Engineer Trainee (IT)

காலியிடம் : 1

சம்பளம் : முதலாம் ஆண்டு மாதம் ரூ. 15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 20,000

வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : CSE, ECE, IT, EEE ஆகிய பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Multi TaskingStaff

காலியிடம் :1

சம்பளம்: மாதம் ரூ. 25,000

வயது வரம்பு : 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : +2 தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iimtrichy.ac.in/career-non-teaching இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.9.2025

மிஸ்பண்ணிடாதீங்க… இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

Indian Institute of Management Tiruchirappalli Recruitment 2025

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest