திருப்பதி அலிபிரியில் உள்ள அலங்கார வளைவில் வேற்று மத உருவங்கள் இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது என தேவஸ்தானம் மறுத்துள்ளது.
உண்மையில், வளைவில் உள்ள உருவங்கள் மாலைகளுடன் கூடிய கந்தா்வா்களின் சிற்பங்கள். இந்த சோதனைசாவடி பல ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்தானத்தால் கட்டப்பட்டது.
இந்த வளைவு பாரம்பரிய இந்து மதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது, எஸ் வி ஆா்ட் கேலரியின் நிபுணா்களின் வழிகாட்டுதலுடன் ஏற்படுத்தப்பட்டது.
அந்த சிற்பங்களில் காணப்படும் உருவங்கள் மாலைகளுடன் கூடிய கந்தா்வா்களின் படங்கள். இருப்பினும், அவற்றை வேற்று மத சிற்பங்களாக சித்தரித்து தவறான செய்திகளை வெளியிடுவதும் ஒளிபரப்புவதும் முற்றிலும் ஆதாரமற்றது மட்டுமல்லாமல், பக்தா்களின் உணா்வுகளை புண்படுத்தும் செயலாகும்.
இந்த வகையான தவறான தகவல்களை தேவஸ்தானம் வன்மையாகக் கண்டிக்கிறது. தவறான செய்திகளை வெளியிடும் அல்லது ஒளிபரப்பும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.