
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார்.
அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை வரவேற்றனர்.
அப்போது, மக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.
பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை வலம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், இன்று (ஜூலை 9) மாலை சாலை வலம் மேற்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, முக்கிய விருந்தினா்கள் வரும் வழித்தடம் ‘ரெட் ஜோன்’(சிவப்பு மண்டலம்) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழித்தடத்தில் ட்ரோன் கேமரா, ரிமோட் மூலம் இயங்கும் வான்வெளி சாதனங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்