
தேனி பங்களா மேட்டில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதழ் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது, “வட இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இங்கு ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது. வட இந்திய வாக்காளர்கள் முழுவதுமே பாஜகவின் வாக்காளர்கள்தான்.
கோவை தெற்கில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாங்கிய 20000 வாக்குகள் வட இந்தியர்களின் வாக்குதான். பாஜக ஆட்சியிலிருந்து வந்ததும் அதிகமான வட இந்தியர்கள் இங்கு வேலைக்கு வருகின்றனர்.

இட ஒதுக்கீடு விஷயத்தில் உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை. ஆனாலும் உள் இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டார்கள் இப்போது அதில் முன்னுரிமை என்பதை எதிர்க்கிறோம். தேவேந்திர குல வேளாளர்கள் விவசாய குடிகள் அதனால் தான் அவர்களை வேளாளர்கள் என அழைக்கின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல.
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கச் சொல்லி மத்திய அரசு மூன்று முறை சொல்லியிருக்கிறது. ஆனால் மாநில அரசு இன்னமும் நீக்கவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பேன்” என்று பேசியிருக்கிறார்.
திருவில்லிபுத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கரிகால் பாண்டியன் போட்டியிடுகிறார் என மேடையில் அறிவித்தார் சீமான்.