
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “மா வந்தே” வில் – மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோடி வேடத்தில் நடிக்கிறார்.
மோடி வாழ்க்கை கதை
சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு “மா வந்தே” திரைப்படம் உருவாகி வருகிறது.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
சிறுவயது முதல் பிரதமர் பதவியை கைப்பற்றும் வரை, அவர் சந்தித்த சவால்களும், உண்மை சம்பவங்களை தழுவி இந்த படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுகு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கூடுதலாக, ஆங்கில பதிப்பாகவும் எடுக்கப்படுவதால் உலகளாவிய ரசிகர்களையும் சென்றடையப் போகிறது.
வெறும் வாழ்க்கை வரலாறு படமாக மட்டுமல்லாமல் , மக்களின் மனதில் தேச பக்தியை விதைக்கும் படமாக “மா வந்தே” திரைப்படம் இருக்கும். பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை இப்படம் தரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்தால் சிறப்பாக இருக்கும்? உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இடவும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!