
லண்டன்: சர்வதேச அளவில் திறமையான நபர்களை ஈர்க்கும் நோக்கில், அவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி பணிபுரிபவர்களுக்கு H1B விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு உயர்த்தியது. இந்த புதிய கட்டண முறை நேற்று (செப்.21) முதல் அமலுக்கு வந்தது. இதனால், புதிதாக H1B விசா விண்ணப்பிப்போருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதுவரை இந்த விசாவை வைத்திருப்பவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள். அந்த வகையில், இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் புணிபுரிய விரும்பும் திறமையான இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.